கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை!
Home > தமிழ் newsசாத்தூர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி பரவியதால், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் வரை இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் அரசு செலவில், அந்த பெண்ணிடம் இருந்து எச்.ஐ.வி’யானது குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில்தான் சிவகாசி ரத்த வங்கியில் ஏற்கனவே ரத்த தானம் வழங்கியிருந்த இளைஞர் தானாக முன்வந்து தான் ரத்தம் கொடுத்ததையும், அதன் பின்னர் தனது உடற்பரிசோதனையின்போது தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டவுடன், உடனே அந்த ரத்தத்தை வழங்கவேண்டாம் என்று தகவல் அளிக்க முயன்றதாகவும் ஆனால் அதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டதையும் கூறினார்.
அவரை பலர் பாராட்டினாலும், நடந்து முடிந்த இந்த தவறுக்காக குற்றவுணர்ச்சியில் அந்த இளைஞர் எலி மருந்தினை உட்கொண்டார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத்தியது' .. இது ‘தல’ பஞ்ச்!
- தாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்!
- சிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.. 5 பேர் விடுதலை!
- ஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை!
- இந்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா? தமிழக அரசு வெளியிட்ட ஆணை!
- 200 ரூபாய் காணவில்லை என தாக்கிய கணவர்.. உயிரிழந்த கர்ப்பிணி மனைவி!
- கர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு!
- மணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!
- 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுகிறதா அரசு?: அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்கள்!
- ‘கருத்தால் ஒன்றுபட்டவர்கள்’..தமிழ்நாடு பெண்களும் பம்பையில்.. திக்திக் நொடிகள்!