வீட்டில் புடவை கட்டாததால் மனைவியை விவாகரத்து செய்ய கோரிய கணவர்.. வழக்கு முடிவு இதுதான்!

Home > தமிழ் news
By |

புனே-வில் மாடர்ன் டிரஸ் அணிவதாகச் சொல்லி மனைவியை விவாகரத்துக் கோரிய நபரது வழக்கு பரபரப்பாகியுள்ளது.  புனேவில் 2 வருடங்களுக்கு முன்பாக, திருமணம் செய்துகொண்ட நபர் தன் அம்மாவுடன் சேர்ந்து, மாடர்ன் டிரஸ் அணியும் தன் மனைவிக்கு தடை விதித்து எந்நேரமும் எப்போதும் புடவை உள்ளிட்ட பாரம்பரியமாகவே ஆடைகளை அணிய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

 

ஆனால் வீட்டில் இருக்கும்போதேனும் அவ்வாறான உடைகளை, சவுகரியத்துக்காக அணிய விரும்பிய அந்த பெண்ணுக்கும், அவரை திருமணம் செய்த இந்த நபருக்கும் சண்டை முத்திப்போகவே இருவரும் தற்காலிகமாக பிரிந்தனர். அவ்வாறு வீட்டை விட்டுச் செல்லும்போது இந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். 

 

இந்நிலையில் புடவை கட்டாமல், மாடர்ன் டிரஸ் அணியும் மனைவியை விவாகரத்து செய்ய இந்த கணவர் தொடர்ந்த வழக்கு புனே ஷிவாஜி நகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. அங்கு தனது 2 வயது குழந்தையுடன் வந்த மனைவியையும் குழந்தையையும் பார்த்த கணவர் மனம் மாறி இருவரையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

DIVORCE, WIFE, HUSBAND, WEARING, COURT, PUNE, MODERN, WOMEN, RIGHTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS