’வெளியூர் சென்று குடிக்க இலவச பஸ் பாஸ் கேட்டு‘..கலெக்டரிடம் மனு கொடுத்த நபர்!

Home > தமிழ் news
By |

டாஸ்மாக் சென்று குடிக்கும் குடிமகன் ஒருவர், தனது ஊரில் குடிக்க மதுக்கடை இல்லாததால், வெளியூர் சென்று குடிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான பயணச் செலவை சரிகட்ட இலவச பஸ் பாஸ் ஒன்றை தரவேண்டியும் ஈரோடு கலெக்டரிடம் முறையிட்டு மனு அளித்துள்ள செய்தி, பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


ஈரோடு அருகே உள்ள வசந்தாபுரத்தைச் சேர்ந்த 40 வயது குடிமகனான செங்கோட்டையன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்த குடிமகன் ஒருவர், ‘கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள வேலாம்பாளையத்தில் பல மாதங்கள் ஆகியும் டாஸ்மாக் திறக்கப்படாததை குறிப்பிட்டு கூலி வேலைக்குச் செல்லும் சில மக்களின் தேவையாக மது இருப்பதையும் மனுவில் உணர்த்தி, அந்த மதுவை அருந்த வெளியூருக்குச் செல்ல வேண்டிய அவலநிலையை சுட்டிக்காட்டி- ஒன்று மதுக்கடை திறக்க வேண்டும் அல்லது வெளியூர் சென்று குடித்து வர சவுகரியமாக இலவச பஸ் பாஸ் வசதி உருவாக்கித் தர வேண்டும்’ என்று தன் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.


முதலில் அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், பின்னர் மனுவை மாவட்ட மதுக்கடை அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்புவதாக  செங்கோட்டையனுக்கு உறுதி அளித்துள்ளனர்.  

ERODE, TASMAC, DRINK, TAMILNADU, COLLECTOR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS