தாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்!
Home > தமிழ் newsகடலூர் அருகே சிதம்பரம் சாக்காங்குடியைச் சேர்ந்த வீரபாண்டியனின் 25 வயது மகள் சிலம்பொலி. இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது செல்லதுரை என்பவரை 5 வருடங்களாக காதலித்துள்ளார்.
இதனை அடுத்து இருவரும், கடந்த வாரம் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். அந்த சமயத்தில், மணமகன் செல்லதுரையின் தாயார் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வந்ததும், செல்லதுரை தாலி கட்டிய 2 மணி நேரத்தில் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை கழட்டிவிட்டு 2 நாட்கள் கழித்து வந்து சிலம்பொலியை அழைத்துச் செல்வதாகச் சொல்லி சென்றுள்ளார்.
ஆனால் போனவர் திரும்பி வரவுமில்லை, சிலம்பொலியின் போனை எடுக்கவுமில்லை. அதிர்ச்சியடைந்த சிலம்பொலி போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் செல்லதுரையின் வீடுதேடி சென்று, தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.
அப்போது சம்பவம் அறிந்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி, அடுத்த ஓரிரு நாட்களில் ஊரை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தியதால் மீண்டும் சிலம்பொலிக்கும் செல்லதுரைக்கும் திருமணம் நடந்துள்ளது. எனினும் செல்லதுரை அவ்வாறு செய்ததற்கான காரணம் விளக்கப்படவில்லை.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை!
- இந்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா? தமிழக அரசு வெளியிட்ட ஆணை!
- 200 ரூபாய் காணவில்லை என தாக்கிய கணவர்.. உயிரிழந்த கர்ப்பிணி மனைவி!
- கர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு!
- மணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!
- Bizarre - Man tries to pay for McDonald's meal with a bag of marijuana
- 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுகிறதா அரசு?: அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்கள்!
- ‘கருத்தால் ஒன்றுபட்டவர்கள்’..தமிழ்நாடு பெண்களும் பம்பையில்.. திக்திக் நொடிகள்!
- 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஊரே கூடி அளித்த தண்டனை!
- நடனமாடிய கிறிஸ்துமஸ் குழுவின் நடுவே வந்த போலீசார் எடுத்த விநோதமான முடிவு!