வரப்போகும் மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் ‘இப்படி ஒரு வார்த்தை’யை அனுப்பியதால் 6 மாத சிறை!

Home > தமிழ் news
By |

அரபுநாடுகளில் ஒவ்வொரு மனித உணர்வுகளும் முக்கியமாக பார்க்கப்படுவது உண்டு. ஒருவர் இன்னொருவரை சொல்லும் ஒவ்வொரு சொல்லும் கூட அங்கு தீர ஆராய்ந்து சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

 

அங்கு ஒரு தவறான, கோபமான TEXT மெசேஜ் கூட பலரை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அப்படித்தான் நபர் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை வாட்ஸாப்பில் ‘இடியட்’ என்று கூறியுள்ளார். அதாவது அரபு மொழியில் ஹப்லா என்று கூறியுள்ளார். அப்படி என்றால் ஆங்கிலத்தில் முட்டாள் என பொருள் தரும் இடியட் என்றாகிறது. 

 

சில நேரங்களில் இதுவும் நடக்கும் என்பதுபோல், அந்த நபர் விளையாட்டாக, பழக்க வழக்கில் போகுற போக்கில் சொன்ன இடியட் என்கிற வார்த்தையை தன் பார்வையில் இருந்து, தன்னை இழிவுபடுத்துவதாக/ தன் மீது ஒரு குற்றம் சாட்டுவதாக/ தான் அவமானப்படுத்தப்படுவதாக எடுத்துக்கொண்ட அந்த பெண், வாட்ஸ் ஆப்பில் இப்படிச் சொன்ன அந்த மாப்பிள்ளை மீது போலீசாரிடத்தில் புகார் அளித்துள்ளார். 

 

உண்மையில் ஒரு மனிதரை கடுமையான வார்த்தைகளால் திட்டும் அதிகாரம் இன்னொருவருக்கு இல்லை என்பதனால், அந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இதனால் அந்த நபர், ரூ.4 லட்சம் (நம்ம ஊர் தொகைக்கு) அபராதம் விதிக்கப்பட்டும், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டும் தீர்ப்பளிக்கப்பட்டார். 

UAE, ARAB, IDIOT, HABLA, VIRAL, WHATSAPP, MESSAGE, ABU DHABI, BUZZ, FIANCEE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS