11 முறை முயற்சி செய்து உருவத்தில் மைக்கேல் ஜாக்சனாகவே மாறிய வைரல் இளைஞர்!
Home > தமிழ் newsஉலக ரசிகர்களின் இசைமூச்சான பாப் பாடகரும், நடனப்புயலுமான மைக்கேல் ஜாக்சனைப் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு முகத்தை மாற்றிக் கொண்ட நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னுடை பாப் இசையின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன். இன்றளவும் மைக்கேல் ஜாக்சனைப் போல் ஆடவேண்டும் என்றுதான் இளைஞர்கள் பலர் அவரது நடனத்தைப் வீடியோவில் பார்த்து கற்றுக் கொண்டிருகின்றனர்.
இதேபோல் அர்ஜண்டினாவைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர் ஒருவர் ஒரு விநோதமான முடிவை எடுத்திருக்கிறார். 22 வயது மதிக்கத்தக்க லொயோ ப்ளான்கோ என்கிற இந்த இளைஞர் சிறுவயதிலிருந்தே மைக்கேல் ஜாக்சனைப் போல் தனது உடல் மொழிகளை மாற்றத் தொடங்கியுள்ளார்.
மேலும் மைக்கேல் ஜாக்சனை போன்றே இவரும் மேடைப் பாடல்கள், நடனங்கள் போன்றவற்றை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மைக்கேல் ஜாக்சனைப் போல் முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து ஆபரேஷனும் செய்துள்ளார். ஆனால் அந்த ஆபரேஷனில் திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஒரு முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இப்படியாக 11 முறை லொயோ ப்ளான்கோ, தன் முகம், மைக்கேல் ஜாக்சனை போல வரவேண்டும் என்பதற்காக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
ஒருவழியாக கடைசியாக செய்த சர்ஜரியில் ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டதால் லொயோ ப்ளான்கோ தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சன் போன்ற முகத்திற்காக லொயோ ப்ளான்கோ 21 லட்சத்து 31 ஆயிரத்து 350 ரூபாய் செலவழித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்கேல் ஜாக்சன் போன்ற லொயோ ப்ளான்கோவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்?
- 'தாடியில பூ வைக்குறதா?'.. என்னடா புது ட்ரெண்டா இருக்கு..வைரல் சேலஞ்ச்!
- ஸ்பைடர்மேனாக வந்து வைரல்மேனாகிய வங்கி ஊழியர்.. இதுதான் காரணம்!
- ‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்!
- 'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்!
- கைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்!
- 'பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் இலவச WiFi தரும் மெஷின்’.. அசத்தும் மாநகராட்சி!
- வகுப்புக்கு வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை!
- ‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. Exclusive பேட்டி!
- காலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி!