'குடிச்ச 2 பாட்டில் தண்ணிக்கு'.. ரூ.7 லட்சத்தை 'டிப்ஸாக' அள்ளிக்கொடுத்த நபர்!
Home > தமிழ் newsஹோட்டல் ஒன்றில் தான் ஆர்டர் செய்த 2 தண்ணீர் பாட்டில்களுக்கு, ரூபாய் 7 லட்சத்தை டிப்ஸாக இளைஞர் ஒருவர் கொடுத்திருக்கிறார்.
யூடியூப் சேனலொன்றை நடத்தி வரும் மிஸ்டர் பீஸ்ட் என்னும் இளைஞர் சமீபத்தில் அமெரிக்காவின் நார்த் கரோலின் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அலைனா கஸ்டர் என்னும் பணிப்பெண் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவரிடம் 2 பாட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் பாட்டில் வந்தவுடன் அதைக்குடித்து விட்டு சுமார் $10,000 டாலர்களை டிப்ஸாக, மிஸ்டர் பீஸ்ட் வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அவர் டிப்ஸாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இவ்வளவு டிப்ஸையும் தனக்கே வைத்துக் கொள்ளாமல், அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப் போவதாக அலைனா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மிஸ்டர் பீஸ்ட் கூறுகையில்,'' ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது அவர் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்,'' என்பதைக் காணவே இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். பீஸ்ட்டின் யூடியூப் சேனலை சுமார் 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- YouTube Suffers Massive Global Outage; Social Media Goes In Meltdown Mode
- #MeTooவுக்கு எதிராக உருவான #HimToo.. முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்!
- 'கல்லறையில் திருமணம்' செய்துகொண்ட காதலி.. கலங்க வைக்கும் புகைப்படங்கள்!
- 'ரூபாய் 7 கோடி மதிப்பிலான கல்லை'.. 30 வருடங்களாக கதவுக்கு முட்டுக்கொடுத்த மனிதன்!
- அமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!
- Man makes movie and 4,000 posters to find dream girl
- 'யூடியூப் பிரசவ எதிரொலி'..ஹீலர் பாஸ்கர் கைது!
- ஹோட்டலில் பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த வாழ்நாள் 'ஜாக்பாட்'
- 'வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த இளைஞர்'.. காரை பரிசாக அளித்த சி.இ.ஓ!
- 'அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள்'.. ஹார்லி டேவிட்சனிடம் கெஞ்சும் டிரம்ப்!