தாயின் நினைவு நாளுக்கு விடுமுறை கிடைக்காததால் ஊழியர் தற்கொலை!

Home > தமிழ் news
By |

மேற்கத்திய நாடுகளில் பனி பொழிவு இருக்கும் ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும், வீட்டில் இருந்து பணிபுரியும் சூழல் உள்ளது. ஆனால் வாரம் முழுவதும் பணி செய்வதும், வார இறுதியில் விடுப்புகள் வழங்கப்படுவதும்தான் தெற்காசிய நாடுகளில் உள்ள நிறுவன கலாச்சாரமாக உள்ளது. 

 

ஆக, இந்தியா போன்ற நாடுகளில் ரிலாக்ஸ் பண்ணுவதற்காகவோ, மிக முக்கியமான காரியங்களுக்காகவோ ஊழியர்கள் அவசர விடுப்புகள் எடுப்பதுண்டு. அதுவும் நினைத்த நேரங்களில் விடுப்பு எடுத்துக்கொள்வதற்காகவும், விடுப்பு எடுப்பதால் வேலை பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் நிரந்தர அரசு வேலைகளை பெற்றுவிட பலர் முனைவதுண்டு. 

 

ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மின்வாரிய உதவிய செயல் பொறியாளராக பணியாற்றிய தனபால் என்பவர், கடந்த ஆண்டு மறைந்த தனது தாயின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக கோரிய ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படாததால், மனமுடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.

 

மகனாகிய தன்னால் மறைந்த தன் தாய்க்கு செய்யப்படவேண்டிய சம்பிரதாய கடமையைச் செய்ய முடியாததாலும், அதற்கான முறையான விடுப்பு தான் பணிபுரியும் அலுவலகத்தில் கொடுக்கப்படாததாலும், கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த கடிதத்தைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SUICIDEATTEMPT, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS