'உணவுடன் இதெல்லாமா டெலிவரி பண்ணுவீங்க'... ஊபர் ஈட்ஸில் ஆர்டர் செய்தவருக்கு நிகழ்ந்த சோகம்!
Home > தமிழ் newsஊபர் ஈட்ஸில் உணவு ஆர்டர் செய்தவருக்கு வந்த பார்சலில்,மலம் கலந்த அழுக்கான உள்ளாடை இருந்ததை கண்ட வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் லியோ.ஊபர் ஈட்ஸின் ரெகுலரான வாடிக்கையாளரான இவர்,மொபைல் ஆப் மூலம் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஞாயிறு இரவு ஊபர் ஈட்ஸ் ஆப்பில்,ஒரு ஐப்பானிய ரெஸ்டாரென்டில் உணவை ஆர்டர் செய்துள்ளார்.மிகவும் ஆவலுடன் உணவை எதிர்பார்த்து கொண்டிருந்த அவருக்கு உணவும் சிறிது நேரம் கழித்து வந்தது.
இந்நிலையில் மிகுந்த ஆவலுடன் இருந்த அவர்,சாப்பிடும் நோக்கத்தில் பார்சலை திறந்த போதுதான் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார் லியோ. ஆர்டர் செய்த உணவுடன் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளாடை ஒன்று இருந்தது.அந்த உள்ளாடையின் மேலே மண்ணுடன் மலமும் கலந்திருந்தது.இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் உடனடியாக ஊபர் ஈட்ஸ், உணவு தயாரித்த ரெஸ்டாரென்ட், மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து லியோவிடம் ஊபர் ஈட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன் அந்த உணவிற்காக அவர் செலுத்திய பணத்தை முழுவதும் திரும்ப அளித்துள்ளது. அதே நேரத்தில் அந்த உணவை டெலிவரி செய்தவரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் தற்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
OTHER NEWS SHOTS