கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரள வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை ஏற்படுத்திவிட்டது.கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்க்கையில் சந்திக்காத துயரங்களை அனுபவித்துவிட்டார்கள்.இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது.இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இன்னும் பலஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது கேரள மக்கள் மெல்லமெல்ல இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருகின்றார்கள்.இதற்கு கேரள அரசும் பெரும் துணையாக இருந்து வருகிறதுஇந்நிலையில் வெள்ளத்தின் பொது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

 

5அடிக்கு மேல் சென்றுகொண்டிருக்கும்  வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தை ஓட்டி கொண்டு செல்கிறார்.அப்போது வெள்ளமானது வாகனத்திற்குள் சென்று  கொண்டிருக்கிறது.இந்நிலையில் ஒருகட்டத்திற்கு மேல் அவரால் வாகனத்தை இயக்கமுடியவில்லை.வாகனம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது.இவ்வாறு அந்த வீடியோ முடிகிறது.தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

BY JENO | AUG 31, 2018 11:05 AM #KERALAFLOOD #KERALA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS