திடீரென வெடித்து சிதறிய சிகரெட்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
Home > தமிழ் newsஇ-சிகரெட் வெடித்துச் சிதறியதால், இளைஞர் ஒருவருக்கு நிகழ்ந்த பரிதாபமான நிலை பலரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸஸ் நகரைச் சேர்ந்த 24 வயதான பிரவுன் ஒரு எலக்ட்ரிக் சிகரெட்டைப் புகைத்துள்ளார். ஆனால் அந்த எலக்ட்ரிக் சிகரெட்டினால் இப்படி ஒரு ஆபத்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். காரணம் அந்த சிகரெட் வெடித்துச் சிதறியுள்ளதுதான். அமெரிக்காவின் போர்ட்வொர்த் நகரில் இருக்கும் ஒரு எலக்ட்ரானிக் சிகரெட் கடையில் எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கியுள்ளார் பிரவுன்.
பின்னர் அதனை, கடைக்கு வெளியே இருந்த தனது காருக்குள் அமர்ந்தபடி புகைத்துள்ளார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் திடீரென சிகரெட் வெடித்துச் சிதறியதால் அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். சிகரெட்டில் புகையிலை இருப்பதாலும், அது சுற்றுச் சூழலுக்கு கேடு என்பதாலும் அதற்கு மாற்றாக பார்க்கப்படும் இ-சிகரெட்டிலும் இப்படி புதுவகையான பிரச்சனை கிளம்பி வருவதால் பலரும் பீதியில் இருக்கின்றனர்.
பின்னர் அவர் தனது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு பக்கவாதம் உண்டானதால் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பிடித்த எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்ததே அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். முன்னதாக அமெரிக்காவின் புளோரிடா நகரைச் சேர்ந்த 38 வயதான இளைஞருக்கும் இதே போல் ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'கன்னியாஸ்திரிகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் உண்மைதான்'.. ஒப்புக்கொண்ட போப்.. பரபரப்பில் மதகுருமார்கள்!
- சுங்கச்சாவடி ஊழியரை இழுத்துப்போட்டு சாவடி அடித்த கட்சி நிர்வாகி!
- ‘வீட்டு வாசலில் இளம் பெண்ணுக்கு’ ..இளைஞரால் நடந்த கொடூரம்!
- 'மனைவியை துண்டு துண்டாக வெட்டிய சினிமா டைரக்டர்'.. பகீர் வாக்குமூலம்!
- 'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை!
- நம் ஃபோட்டோக்களை வைத்து சம்பாதிக்கும் ‘இந்த’ 29 ஆப்ஸ்.. ஆப்பு வைத்த கூகுள்!
- சாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- சிகப்பு சட்டை அணிய தடை கோரிய மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- ‘நச்சுக் காற்றால் நாடே அவதிப்படும் கொடூரம்’.. தொழிற்சாலை மூடப்படுமா?
- ‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு!