செல்போன் பார்சலை டெலிவரி செய்த போஸ்ட்மேனின் ‘விரலுக்கு’ நேர்ந்த அவலம்!

Home > தமிழ் news
By |

மேற்கு வங்கத்தில் முகமது அஃப்ரதுல் ஒரு செல்போனை இணையதளம் மூலமாக ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் தனது பகுதிக்கு செல்போனை டெலிவரி செய்யும் சேவை இல்லை என்று அந்த இணையதளம் கூறியதால், அருகில் இருந்த போஸ்ட் ஆபீசுக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். 

 

போஸ்ட் ஆபீஸுக்கு வந்ததும் பார்சலை பார்த்தபோஸ்ட் மேன், அஃரப்துலிடம் கொண்டுவந்து டெலிவரி செய்தார். டெலிவரி செய்யும் முன்னரே செல்போனுக்கான பணம் ரூ.3500 மற்றும் டெலிவரி சார்ஜ் 98 ரூபாய் என மொத்தம்  ரூ.3598-ஐ பெற்றுக்கொண்டு பார்சலைக் கொடுத்துள்ளார். 

 

பார்சலை பிரித்து பார்த்த அஃப்ரதுல் அதில் தான் 3500 ரூபாய்க்கு ஆர்டர் செய்த செல்போன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, அதற்கு பதிலாக 5 ரூபாய் சோப்பு இருந்ததை கண்டு ஆத்திரடமடைந்து போஸ்ட் மேனிடம் தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். 

 

போஸ்ட் மேன், அது தான் டெலிவரி செய்த பார்சலுக்கான பணம் அதை எப்படி தருவது என்றுச் சொல்லி ஓட முயற்சிக்கவே, அஃப்ரதுல் போஸ்ட் மேனின் விரல்களை கடிக்கவும், ஓடிச்சென்று போஸ்ட்மேனின் பணப்பையை பிடுங்கவும் முயன்றதை அடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியிடப்பட்டார். 

 

தன் மகனுக்கு செல்போன் ஆர்டர் செய்ததாகவும், செல்போன் இல்லாததால் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரமடைந்ததாகவும் அஃப்ரதுல் கூறியதை அடுத்து, அப்பகுதி போலீசார் , சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

WEST BENGAL, ONLINEPURCHASE, CELLPHONE, POSTMASTER, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS