திடீரென மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர் .. முதல்வர் நேரில் ஆறுதல்!

Home > தமிழ் news
By |

பெங்களூரில் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ரயில் முன்பு பாய்ந்ததிற்கான காரணம் குறித்து சம்பந்தபட்ட  இளைஞரிடம் அம்மாநில முதல்வர் குமாரசாமி விசாரித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று காலை பசவனகுடி நேஷனல் கல்லூரியின் மெட்ரோ நிலையத்தில் பயணிகளுடன் ஒரு பயணியாக இளைஞர் ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். சிறிது நேரத்தில் மெட்ரோ ரயில் ஒன்று குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் பயணத்திற்காக நின்ற அந்த இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து குதித்துள்ளார்.

இதனைக் கண்டு ரயில் நிலையத்தில் இருந்த இரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலினை நிறுத்தியுள்ளார். இதே நேரத்தில் ரயில்வே ஊழியர் மின்சாரத்தையும் துண்டித்துள்ளார். பிறகு ரயில் முன்பு பாய்ந்த இளைஞரை  ஓடிப்போய் பார்த்தபோது அவருக்கு பலத்த அடிப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அனைவரும் விரைவாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த எதிர்பாராத இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த அந்த இளைஞரை அம்மாநில முதல்வர் குமாரசாமி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் அந்த இளைஞரை,  உடல் நிலை சரியாகும் வரை கவனித்துக் கொள்ளுமாறும் மருத்துவரிடம் கூறிவிட்டு தற்கொலைக்கான காரணங்களை கேட்டுத்தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். முதல்வர் வந்துபோன பிறகு காவல் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

TRAINACCIDENT, BENGALURU, YOUNGSTER, BIZARRE, KARNATAKA, CM, METRO, TRAIN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS