பாரசீகத்தின் பாலைவன பகுதிகளுக்குள் நடந்து செல்ல வேண்டும் என்றால், அதிக சுமைகளை எடுத்துச் செல்ல முடியாது. அந்த மாதிரியான சூழல்களில் அரேபியர்களும்-பாரசீகர்களும் சேர்ந்து ஒரு பாத்திரத்திலேயே மாமிசத்தையும், தானியம் மற்றும் காய்கறி புலவுகளையும் சேர்த்து வேகவைப்பர். இதனை ’பிலாஃப்’ என்று குறிப்பிட்டனர். 

 

பின்னர் இந்தியாவிற்கு வந்த அப்போதைய முகலாயர்கள் இதே கலவைகளுடன் மசாலா சேர்த்து ஒரு புது உணவைச் சமைத்தனர். அதுவே பிற்கால-தற்கால ‘பிரியாணி’.  மாமிச புலவு சாதம் அல்லது ஊன் பொதிசோறு என்றழைக்கப்படும் இதன் ‘திவ்யமான’ சுவைதான் தற்போது, அதிகாரமாக குமட்டில் குத்தி பிரியாணியை கேட்க வைக்கிறது போலும். 

 

விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரியாணி தீர்ந்துவிட்டதால், திமுக உறுப்பினர் யுவராஜ் அந்த கடை ஊழியர்களை அடித்துவிட்ட சம்பவம் நேற்றைய தினம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் இந்த அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். முன்னதாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தற்காலிக நீக்கம் செய்திருப்பதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | AUG 2, 2018 12:05 PM #DMK #BRIYANI #BRIYANIFIGHT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS