சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிகமானோர் வேலைக்காக சென்றுள்ளனர். அதேபோல், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பெருவியாபாரிகள் பலரும் அங்கு சென்று தொழில்புரிகின்றனர்.
இந்நிலையில் மலேசிய குடிவரவுத்துறை தலைவர் தடுக் செரி முஸ்தபர் அலி அந்நாட்டு அரசுடனான ஆலோசனையின்படி, 1.40 லட்சம் வெளிநாட்டவரை மலேசியாவில் இருந்து வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு இந்தியர்கள் மற்றும் மலேசிய வாழ் இந்தியர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதன்படி மலேசியாவில் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களுக்கும், விசா காலம் முடிந்தும் அங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது, இந்த தண்டனைக்குரிய குற்றங்களுக்கு மன்னிப்பு அளிக்கும் வகையில், அபராதமாக 300 மலேசிய ரிங்கட்டும் (இந்திய மதிப்பில் 5000 ரூபாய்) சொந்த நாடு திரும்பும் விசாவைப் பெற 100 மலேசிய ரிங்கட்டும் (1600 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டவர் நாடு கடத்தப்படுவதைத் தடுக்கவே இந்த திட்டம் குறித்து என மலேசிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Modi is the first PM to visit this country after 30 years
- பணமில்லாததால் 'மாற்றுத்திறனாளி' கணவனை முதுகில் சுமந்த மனைவி
- Nidahas Trophy: India Vs Bangladesh finals underway
- "India is a very good side, but..." - Bangladesh captain Shakib Al Hasan
- உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
- 'கமலஹாசன்' அரசியல் குறித்து பிரபல 'கிரிக்கெட்' வீரர் கருத்து
- South African chef removed from serving Team India, here is why
- கோலி-குல்தீப்-சாஹல் கூட்டணியிடம் 'வீழ்ந்தது' தென் ஆப்பிரிக்கா!
- மணப்பெண்ணிடம் 'செல்பி' கேட்ட வாலிபருக்கு நிகழ்ந்த விபரீதம்!
- தென் ஆப்பிரிக்காவின் 'பிங்க் சீருடை' செண்டிமெண்ட்: வரலாற்றை மாற்றுமா விராட் அணி?