"செல்ஃபிக்காக முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்"...அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரி!

Home > தமிழ் news
By |

செல்ஃபி மோகத்தால் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா சொகுசு கப்பலின் ஆபத்தான பகுதியில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்த விவகாரம் கடும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பை முதல் கோவா வரை இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்து மும்பை கடல் பகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர்.இந்த கப்பலில் சுமார் 400 பயணிகள் வரை பயணிக்கலாம்.மேலும் வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இந்த கப்பல் சேவை இருக்கும் என தெரிகிறது.

 

இந்த விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவும் கலந்துகொண்டார்.நிகழ்ச்சிக்கு பின்பு அவர் நடந்து கொண்ட விதம் தான்  அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.அம்ருதா சொகுசுக்கப்பலின் பல பகுதிகளில் நின்று செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தார்.

 

ஆனால் திடீரென கப்பலின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றார்.அந்த பகுதியானது கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியின் நுனியாகும்.யாரும் எதிர்பாராத நேரத்தில் அதில் அமர்ந்தவாறு செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தார்.உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ,செல்ஃபி எடுப்பதிலே மும்முரமாக இருந்தார்.

 

முதல்வர் மனைவின் செயலை கண்ட பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தலையில் அடித்துக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

MUMBAI, MAHARASHTRA CHIEF MINISTER, AMRUTA FADNAVIS, CRUISE, SELFIE, DEVENDRA FADNAVIS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS