உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து, தி.மு.க தலைவர் பதவி காலியானதால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, தி.மு.க தலைவர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

இதில், காலியாக உள்ள தி.மு.க தலைவர் பதவிக்கு, மு.க.ஸ்டாலின்வேட்புமனு தாக்கல்செய்தார். அதேபோல, பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். மேற்கண்ட பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய முன்வராததால், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று நடைபெறும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். 

 

திமுக தலைவராக ஸ்டாலின் பெயர் இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறது.பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களும், 700 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களா 5000 பேர் கலந்து கொள்கிறார்கள்.

 

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்படும் நிலையில், ட்விட்டரில் தேசிய அளவில் அவரது பெயர் ட்ரெண்டாகி முதலிடத்தில் உள்ளது

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS