வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் பேருந்து.. பதைபதைக்கச் செய்யும் வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது.தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த குலு மற்றும் மணாலி பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில் மணாலியில் உள்ள ஆற்றை ஒட்டிய பகுதியில் நிறுத்தப்பட்ட சுற்றுலா பேருந்தொன்று, ஆர்ப்பரித்து  வரும்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ள.பார்ப்போரை பதபதைக்க வைக்கச் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

HEAVYRAIN, HIMALAYAS, LUXURY TOURIST, BUS WASHED, FLOODED RIVER, MANALI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS