‘ஆஹா இங்கனயே சுத்துதே.. எப்படி வண்டிய எடுக்குறது?’..அலறவைத்த சிறுத்தை.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

சிறுத்தை மீது பயம் கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள் குறைவுதான்.

ஆனால் அது மனிதர்களை என்ன செய்துவிடப் போகிறது? அது தன் பாட்டுக்கு காற்றில் சுற்றிக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கும் அவ்வளவுதான். தனக்கான நீர் நிலைகளைத் தேடி, வெப்பமயமாகும் இந்த பூமியில் வறண்ட பசியுடன் தன் காட்டில் அலைந்து திரியும் சிறுத்தைக்கு இடையூறாக நம்மவர்கள் காட்டுக்குள் சென்று சிறுத்தையிடம் வம்பிழுக்காமல் இருக்கும்வரை சிறுத்தைகள் மனிதர்களை ஒன்றும் செய்யப் போவதில்லை.

மாறாக  நாம் வாகனங்களை செய்யும் பார்க்கிங் ஏரியாவில் கம்பீரமாக ஒரு சிறுத்தை நடமாடிக்கொண்டிருந்தால்? அது நம் வண்டிக்கு காவல்தானே இருக்கிறது என நினைத்து நாம் பாட்டுக்கு நம் வண்டியை சென்று எடுத்துக்கொண்டு கிளம்ப முடியுமா? பிறகு அது கிளம்பிவிட்டால் என்ன செய்வது?

ஆம், சமீப காலமாகவே மகாராஷ்டிரா உள்ளிட்ட சில வடமாநில பகுதிகளில் சிறுத்தைகள் ஊருக்குள் நடமாடுவதும், பொதுமக்கள் புழங்கும் இடங்களுக்கு வந்துபோவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் பலத்த அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். அப்படித்தான் தானே மாவட்டம் சமதா நகரின் சத்கார் ரெஸிடென்சியின் பார்க்கிங் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை, அதற்கு எதிர்ப்புறம் இருந்த உணவகம் ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் வனத்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் வந்த வழியும் போன வழியும் தெரியாமல் போனதால் நீண்ட நேரமாக வனத்துறையினர் தேடிப் பார்த்துள்ளனர். சிறுத்தை ரொம்ப சாதாரணமாக நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

MAHARASHTRA, LEOPARD, HOTEL SATKAR RESIDENCY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS