"தல தோனி ஆப்சென்ட்"...சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டி:என்னாச்சு டிக்கெட் விற்பனை!
Home > தமிழ் newsஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் வீரருமான தோனி இல்லாததால் சென்னையில் நடைபெறும் கடைசி டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை எதிர்பார்த்தபடி இல்லை என்று கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இறுதியாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதின. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி,இந்தத் தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது.இந்நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.போட்டிக்கான கட்டணமாக 1200 ரூபாயில் இருந்து 2400 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி விற்பனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 24 ஆயிரம் ரசிகர்கள் வரை அமரலாம்.ஆனால் இதுவரை குறைந்த அளவு ரசிகர்களே டிக்கெட் வாங்கியுள்ளனர். போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில்,நிச்சயம் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் சென்னை ரசிகர்கள் தல என செல்லமாக அழைக்கும் தோனி இல்லாததாலும்,இந்திய கேப்டன் விராத் கோலி இல்லாததாலும் ரசிகர்கள் இந்தப் போட்டியில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- "இது சச்சின் ஸ்டைல் தீபாவளி":கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு சச்சின் வைத்த வித்தியாசமான டெஸ்ட்!
- "இது என்ன புதுசா இருக்கு"....வைரலாகும் 360 டிகிரி பந்துவீச்சு!
- Watch - This unique bowling action is going viral!
- Virat Kohli gives explanation for his 'Leave India' comment
- Here's how Shane Warne disciplined Jadeja into coming early
- "என்ன சின்ன புள்ள தனமா இருக்கு"...பொல்லார்டை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
- ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த நியூஸி வீரர்கள்!
- "நாட்டை விட்டு போ"...ரசிகருக்கு காட்டமாக பதிலளித்த கோலி:சர்ச்சையில் சிக்கியிருக்கும் வீடியோ!
- 'Don't Live In India If You Love Batsmen From Other Countries': Virat Kohli Responds To Fan
- WATCH | Keiron Pollard Tries To Distract Jaspirt Bumrah While Taking A Catch