'அடேங்கப்பா'...620 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற பெண்கள்...அதிர்ந்த கடவுளின் தேசம்!

Home > தமிழ் news
By |

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் பெண்கள் மேற்கொண்ட மனிதச் சுவர் போராட்டம்,கேரளாவை அதிரவைத்துள்ளது.

 

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற அறிவிப்பைத் தொடர்ந்து,பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தனர்.ஆனால் சபரிமலை சென்று,கோவிலுக்கு  உள்ளே செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால்,சபரிமலைப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவம் வேண்டும் என்பதை வலியுறுத்தி,நேற்று ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனிதச் சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டம் அனைவரின் கவனத்தை பெற்றதோடு,கேரளாவையே அதிரவைத்துள்ளது.

 

இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை சுமார் 620 கி.மீ தூரத்துக்கு பெண்கள் அணிவகுத்து நின்றனர்.அரை மணி நேரம் நடைபெற்ற,மனிதச் சுவர் போராட்டதை காண்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS