‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு!

Home > தமிழ் news
By |

இயற்கை உபாதையால் அவதிப்பட்ட பெண்ணுக்கு பரிவு காட்டும் வகையில் நடுவழியில் போய்க்கொண்டிருந்த பேருந்தை ஓரிடத்தில் நிறுத்தாததால் ஓடும் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் குதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பாண்டியம்மாளுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இயற்கை உபாதைக்காக பேருந்தை நிறுத்தச்சொல்லி நடத்துநரிடம் பாண்டியம்மாள் கேட்டுள்ளார். இதனை கேட்ட நடத்துநர் பேருந்தை நிறுத்த முடியாது என மறுத்துள்ளார். ஆனால் நடத்துநரை விமர்சிக்கும் வகையில் சற்றும் தாமதிக்காமல் பாண்டியம்மாள் பேருந்திலிருந்து உடனே குதித்துள்ளார்.

இதனால் பாண்டியம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனே பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் பாண்டியம்மாளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டியம்மாள், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் பாண்டியம்மாளின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TAMILNADU, BUS, BIZARRE, WOMAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS