காளி கோயில் முன்பாக சீருடையுடன் நடனமாடிய பெண் காவலர்கள்: வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

காவல் துறையினர் பெரும்பாலும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்படும்போது அலுவல் ரீதியான கட்டளைகளையும் நிபந்தனையையும் ஏற்று அமைதியாக நிற்பது உண்டு. சில நேரங்களில் தங்களுக்கு நெருக்கமான போராட்டங்களிலோ, பேரணிகளிலோ, பண்டிகைக் கொண்டாட்டங்களிலோ உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இறங்கிவிடுவதும் உண்டு. அதனால் அவர்கள் தங்கள் துறையில் சந்திக்கும் பின் விளைவுகளை அந்த குறிப்பிட்ட தருணத்தில் பலராலும் யோசிக்க வாய்ப்பில்லை.


முன்னதாக ஜல்லிக்கட்டி போராட்டத்தில்  உணர்ச்சிவசப்பட்ட காவலரை தமிழ்நாடே அறியும். இதேபோல் மேற்குவங்கத்தின் ஹவுரா நகர காவல் துறையினரைச் சேர்ந்த மகளிர் காவலர்கள் அங்குள்ள ஷிப்பூர் காவல் நிலைய தலைமை அலுவலகலத்தில் நிகழ்ந்த காளி சிலை கும்பாபிஷேக சடங்கில் உணர்ச்சிவசப்பட்டு ஆடியுள்ளது கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகியுள்ளன. காவல் துறையினரான அவர்கள் அடிப்படையில் பக்தர்களாகவே இருப்பினும் காவல்துறை உடுப்பிலேயே அவர்கள் நடனம் ஆடியிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 

KOLKATA, WESTBENGAL, LADY CONSTABLES, VIRAL, VIDEO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS