’வேண்டாம்; எனக்கு கடவுள் வெகுமதி கொடுப்பார்’: கூலி தொழிலாளிக்கு குவியும் புகழாரங்கள்!

Home > தமிழ் news
By |

2015- திருடு போன ஜோடி தங்கத் தோடுகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தினக்கூலித் தொழிலாளியின் மாண்பை இணையத்தில் பலரும் பாராட்டி வருவதோடு, அவரது செயலால் அவர் இணையத்தில் ஹீரோவாக வலம் வருகிறார்.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஸீசான் கட்டாக் என்பவர் தனது ட்வீட்டில் விரிவாகக் கூறியுள்ளார். அதன்படி, தனது வீட்டை ஒட்டிய இன்னொரு பாகத்தில் கட்டுமான பணிகள் நடந்துவருவதாகவும், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க தினக்கூலி, தன் கைகளில் கிடைத்த, ஒரு ஜோடி தங்கத் தோட்டினை எடுத்துக்கொண்டு வந்து உரிமையாளர் வீட்டின் கதவினைத் தட்டியுள்ளார். 

 

கதவைத் திறந்த வீட்டு உரிமையாளரான, ஸீசான் கட்டாக்கிடம், அந்த தினக்கூலி, ‘ஏதேனும் தங்க ஆபரணத்தை தவறவிட்டுள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு ஸீசானின் சகோதரர்- ஆமாம், 2015ல் ஒரு ஜோடி தங்கத் தோடு என்று பதில் அளித்ததுதான் தாமதம், உடனே தினக் கூலி தன் பாக்கெட்டில் இருந்து  தங்கத் தோடுகளை எடுத்துக்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். நெகிழ்ந்துபோன உரிமையாளர்கள் கொடுக்க வந்த வெகுமதியை மறுத்த அந்த கூலித் தொழிலாளிம் தனக்கு கடவுள் வெகுமதி அளிப்பார் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இவரை பலரும் இணையத்தில் நேர்மையின் குறியீடு என புகழ்ந்து வருகின்றனர். 

 

INSPIRING, HUMANITY, HONEST, LABOURER, VIRAL, SOCIALMEDIA, TRENDING, CHARACTER, INTEGRITY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS