குழந்தைகளை விஷம் வைத்துக் கொலை செய்த வழக்கில் கைதான குன்றத்தூர் அபிராமி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜெயிலில் அவர் பட்டினி கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முதல் நான்கு நாட்கள் அவர் ஜெயிலில் பட்டினி கிடந்ததாகவும்,அதனால் மயங்கி விழுந்த அவரை முதலுதவி அளித்து சாப்பிட வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் எதுவும் பேசாமல் இருந்த அபிராமி, தற்போது சக கைதிகளுடன் பேச ஆரம்பித்து இருக்கிறாராம்.

 

சிலரிடம் தனது வாழ்க்கையை எண்ணி அவர் வருத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு பேசுகையில், ''நானும் சுந்தரமும், டப்ஸ்மாஷ் சேர்ந்து செய்தோம். அதன்பிறகு அவருடன் நட்பு ஏற்பட்டுஎனது வாழ்க்கையே நாசமாகி விட்டது,'' என அபிராமி வருந்தியுள்ளார்.

BY MANJULA | SEP 9, 2018 4:52 PM #CHENNAIHORROR #KUNDRATHUR #ABIRAMI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS