'தோல்வியடைய இதெல்லாம் காரணமா இருக்குமா'...தோல்வி குறித்து இந்திய வீரரின் ஓபன் டாக்!

Home > தமிழ் news
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில்,நியூசிலாந்து அணி இந்தியாவை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இந்த தோல்விக்கு ஸ்கோர்போர்டு அழுத்தமே முக்கிய காரணம் என  இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ''முதல் டி20 தோல்விக்கு ஸ்கோர்போர்டு அழுத்தமே முக்கிய காரணமாகும்.ஏனென்றால் அதில் இலக்கு அதிகமாக இருந்தது.அது விளையாடும் போது அதிக அழுத்தத்தை வீரர்களுக்கு கொடுத்தது.மேலும் பந்துவீச்சில் நடுவரிசை ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த பௌலர்கள் தவறிவிட்டார்கள்.அதுவும் ஒரு பெரிய தவறாக அமைந்து விட்டது .

அதுமட்டுமல்லாமல் பவர்ப்ளே ஓவர்களிலும் பௌலர்கள் அதிக ரன்களை வாரி வழங்கினார்கள்.அதோடு தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் தவறவிட்ட இரண்டு கேட்ச்களும் மிகமுக்கியமான ஒன்றாகும்.தோனி தவறவிட்ட கேட்ச்சால்  செய்ஃபெர்ட் 43 பந்தில் 84 ரன் குவித்தார். அதுதான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.மேலும் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பேட்டிங் அவர்களை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டையும் க்ருணால் பாண்ட்யா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.மேலும் ஆக்லாந்து போட்டியில் நடந்த எல்லா தவறுகளையும் சரி செய்து,அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

BCCI, CRICKET, MSDHONI, KRUNAL PANDYA, SCOREBOARD PRESSURE, 1ST T20I

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS