'க்ரில் சிக்கன் சாப்பிடாதிங்க'...நாங்க சொல்ற சிக்கனை சாப்பிட்டா...இன்னும் செமயா விளையாடலாம்...இந்திய வீரருக்கு அறிவுரை சொன்ன நிறுவனம்!

Home > தமிழ் news
By |

க்ரில் சிக்கனை உணவாக எடுத்து கொள்ள வேண்டாம் என,இந்திய கேப்டன் கோலிக்கு மத்திய பிரதேசம் ஜாபாவில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்த்ரா கோரிக்கை வைத்துள்ளது.

 

கடந்த வருடம் 'ப்ரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்'' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் கோலி,தான் க்ரில் சிக்கனை உணவாக எடுத்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் மத்திய பிரதேசம் ஜாபாவில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்த்ரா கோலிக்கு,ஒரு கோரிக்கையை வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

 

அதில் "க்ரில் சிக்கனை உணவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக கேதக்நாத் சிக்கனை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குறைவாகவும், புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவும் உள்ளது.இது உங்கள் விளையாட்டு திறனிற்கு பெரிதும் உதவும்" என்று குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் ''கேதக்நாத் சிக்கன் தேசிய ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டு மிகவும் சிற‌ந்த உணவு" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் க்ரிஷி விக்யான் கேந்த்ரா தெரிவித்துள்ளது.இந்திய அணிக்கு தேவைப்பட்டால் கேதக்நாத் சிக்கனை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த கடிதத்தை வெளியிட்டிருக்கும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்,இந்திய கேப்டன் விராட் கோலிக்கு  இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதாக,அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

VIRATKOHLI, CRICKET, KADAKNATH CHICKEN, KRISHI VIGYAN KENDRA, GRILLED CHICKEN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS