வெற்றிக்களிப்பில் ‘மைதானத்தை சுற்றிவந்த தல’யும் தளபதியும்’.. வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |

நியூசிலாந்து - இந்தியா  இடையேயான முதல் ஒருநாள் போட்டி நியூஸிலாந்தின் நேப்பியர் நகரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் தொடங்கியது. முதல்நாளே ஆட்டத்திலேயே அபாரமாக வெற்றியை ருசிக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.

போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் தோனியும், கோலியும் வெற்றிக்களிப்பில் ஜாலியாக விளையாண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இந்நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி 157 ரன்களில் சுருண்டதை அடுத்து, 158 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக ஆடி ஆட்டத்தை துவக்கினர்.

பின்னர் 2 விக்கெட்டுகளை இழந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதோடு, தவான் இந்த போட்டியில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.  இதனால் சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர் லாராவின் சாதனைகளை தவான் முறியடித்துள்ளார்.

முன்னதாக கிரிக்கெட் வீரர் மதன் லால், நியூஸிலாந்து அணியை வெற்றிகொள்வது பற்றிய ஆலோசனையையே எச்சரிக்கையாக இந்திய அணிக்கு தெரிவித்திருந்தார்.  ஆனாலும் இந்திய அணியின் கடுமையான பயிற்சியினால் நியூஸிலாந்தினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முடிந்தது.

இந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு  இந்திய அணியின் கேப்டன் கோலியும், முன்னாள் கேப்டன் தோனியும் மைதானத்திலேயே ‘ஸெக்வே’ என்கிற ஒற்றை ஆள் இயக்கும் வாகனத்தை தனித்தனியே இருவரும் இயக்கியபடி வலம்வந்துள்ளனர். முதலில் தோனியும் பிறகு கோலியும் வலம் வந்த இந்த வாகனம், வாகனத்தில் நிற்பவரின் காலில் இருந்து வரும் அழுத்தத்தினால் இயங்கக்கூடியது. இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

BCCI, VIRATKOHLI, MSDHONI, NZVIND, TEAMINDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS