‘இது என் அணியே இல்லை’.. வெற்றிக்கு பின் விராட் கோலியின் வைரல் மெசேஜ்!

Home > தமிழ் news
By |

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சீரியஸான டெஸ்ட் சீரிஸ் போட்டிகள் சமன் செய்யப்பட்டு முடிவில் இந்தியா வென்றுள்ளது. கடந்த 72 வருடங்களில் 11 சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தாத நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி, வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது இந்தியா.

 

இந்த டெஸ்ட் சீரிஸ் தொடரை வென்றுள்ள முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் கோலி பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ளார். முன்னதாக  1983ல் இந்தியா, கபில் தேவ் தலைமையில் உலககக் கோப்பையை வென்ற பிறகு 2011ல் தோனி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது. அதில் இளம் வீரராக இடம் பெற்றிருந்தார் விராட் கோலி. இந்நிலையில் இளைஞர்களை தன் அணியில் கொண்டு தற்போதைய தொடரை வென்றுள்ள கோலி, இந்த தொடரில் ஒரு சதம் உட்பட 282 ரன்கள் குவித்தார்.

 

இதுபற்றி ட்வீட் செய்துள்ள விராட் கோலி இந்த வெற்றி தனது வாழ்க்கையில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த  மகத்தான தருணம் என்றும், இத்தனை திறமைமிக்க இந்திய வீரர்களை வழிநடத்துவது தனக்கு பெருமை, இந்த வீரர்கள் தன்னை பெருமையாக உணரவைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். 

 

மேலும் ஒரு வருட கால கடின உழைப்புக்கு பிறகும், தான் கேட்பனாகியதில் இருந்தும் இத்தகைய வெற்றியை அடையும் முயற்சியில் இருந்தோம், அதற்கு இந்த அணி தகுதியான அணிதான் என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.  மேலும் ட்விட்டரில் விராட், இது வெறுமனே என் அணியே அல்ல, மாறாக இது தன் குடும்பம் என்றும் கூறியுள்ளார்.

TEAMINDIA, AUSVIND, VIRATAKOHLI, CRICKET, TESTSERIES, SYDENYTEST, WINNINGSERIES

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS