ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை ருசித்துள்ளது.
இந்தநிலையில் தோல்விக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அளித்த பேட்டியில், கோலிக்கு நன்றாகவே பந்துகள் வீசுகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜோ ரூட் கூறும்போது, ''இந்திய அணியை விரைவில் வீழ்த்தியிருக்க வேண்டும்.இந்திய வீரர்கள் நன்றாக பேட் செய்தனர். 2-வது இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ்-பட்லர் கூட்டணி எங்களுக்கு நல்ல பாடம். ஏனெனில் ரன்களை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதில் அவர்களுக்கு தெளிவு இருந்தது.
கேட்சுகளை விடாமல் பிடிக்க வேண்டும். இதுவரை அது எங்களுக்குக் கைகொடுக்கவில்லை. ஒருவேளை அது கைகொடுக்கத் தொடங்கிவிட்டால், அது மிகப்பெரிய அளவில் பலன்களை அளிக்கும்.
விராட் கோலிக்கு நன்றாகவே பந்து வீசுகிறோம். அவரால் எங்களுக்கு எதிராக விரைவாக ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆனால் அவர் ரன்கள் எடுக்கும் வழியைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்,'' என்றார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Popular IPL Indian star debuts in 3rd Test against England
- தினேஷ் கார்த்திக்குப் பதிலாக 'அறிமுக வீரரை' களமிறக்கிய இந்தியா!
- 'சட்டை அழுக்காவதற்கும் தயாராக வேண்டும்'.. வீரர்களுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
- 'ஹர்திக் பாண்டியாவை இனி ஆல்ரவுண்டர் என கூப்பிடாதீர்கள்'.. பிரபல வீரர் காட்டம்!
- Virat Kohli's emotional message to fans after consecutive defeats
- கடினமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுவேன்.. என்னும் வீரர்களே அணிக்குத் தேவை!
- 'வலைப்பயிற்சியில்' கூட தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவில்லை
- 'இந்திய வீரர்களின் லஞ்ச்' இதுதான்...வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
- Massive feat: Virat Kohli goes past Steve Smith
- 'விராட் போராட்டம் வீண்'..தனி ஒருவனாக இந்தியாவை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்!