''4வது ஆர்டர்ல யாரு இறங்குனா நல்லா இருக்கும்''?...மனம் திறந்த கோலி!

Home > தமிழ் news
By |

நடந்து முடிந்த 11 ஒருநாள் தொடர்களில் 10 தொடர்களை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.இருப்பினும் 4வதாக களம் இறங்க நிலையான வீரர் தேவை என்ற விவாதம் பரவலாக நடைபெற்றுவருகிறது.கடந்த அக்டோபரில் கேப்டன் விராட் கோலி 4ம் நிலைக்கு அம்பாத்தி ராயுடு களமிறங்க ஆதரவு தெரிவித்தார்.இருப்பினும் முதல் 3 வீரர்ககள் போட்டு கொடுக்கும் அடித்தளமே அணிக்கு பலமாக இருப்பதால்,4வதாக இறங்க நிச்சயம் பலமான வீரர் தேவை.

இந்நிலையில் 4ம் நிலை வீரர் யார் என்ற விவாதம் மீண்டும் தொடங்கி இருக்கும் நிலையில் இதுகுறித்து பேசிய கோலி ''கடந்த போட்டிகளை பார்க்கும் போது 4ம் நிலை வீரரின் தேவை மிகமுக்கியமானது.ராயுடு நன்றாக ஆடும்போது அவர்தான் சரி என்று நம்பிக்கை வருகிறது. தினேஷ் கார்த்திக்கும் பெரிய பார்மில் இருக்கிறார், தேவைப்பட்டால் அவரையும் 4ம் நிலையில் ஆட வைக்கலாம்.தோனியின் செயல்படும் மிக நன்றாகவே இருக்கிறது.எனவே அனைவரும் நல்ல நிலையில் இருப்பதால்,தற்போது 4ம் நிலை பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.

முதலில் பேட் செய்யும் போது என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பது நமக்கு தெரியாது.அதை களத்தில் இருப்பவர் தான் முடிவு செய்ய வேண்டும்.அதற்கு 4ம் நிலை வீரரின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.எனவே தற்போது 4ம் நிலை வீரர் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என கோலி தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS