'உலக கிரிக்கெட்டே இவரோட தலையில தான் இருக்கு'...என்ன இவரே இப்படி புகழ்ந்துட்டாரு!

Home > News Shots > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை வென்ற,ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை புரிந்தார் விராட் கோலி.222 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39 சதங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கும் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் வீரர் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் '' கோலி தனது முழு திறனையும் ஆட்டத்தின் போது வெளிப்படுத்துகிறார்.இதன்  மூலம் அவரது அணிக்கு சிறப்பான ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறார்.அவரது தலை மற்றும் தோளில் தான் இன்றைய உலக கிரிக்கெட்டே உள்ளது.அவர் கிரிக்கெட் ஆடும் விதம் மற்றும் கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது,நிச்சயம் கிரிக்கெட்டில் அவர் தான் தலை சிறந்த வீரராக இருப்பார்.

மேலும் வில்லியம்சன், ஸ்மித், ரூட் என கடுமையான போட்டிகளுக்கு நடுவில் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடம் வகிக்கிறார். அது என்னை மிகவும் பிரமிப்படைய செய்கிறது.அவருடைய அனைத்து வகையான சாதனைகளை காணும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டின் அணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.மைதானத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் இருக்கும் அழுத்தத்தை சமாளிப்பதுதான் விராட் கோலியின் மிகப்பெரிய பலம்.அதனை கோலி மிகவும் திறம்பட கையாள்கிறார்.

சச்சினை பார்த்து வளர்ந்த தலைமுறை நாங்கள்,அடுத்த தலைமுறை நிச்சயம் கோலியை பார்த்து தான் வளரும் என்பதில் ஐயமில்லை என ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

CRICKET, VIRATKOHLI, SRILANKA, KUMAR SANGAKKARA, ICC

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES