'இதுக்காகத்தான் நாங்க செலக்ட் பண்ணினோம்'...ஆமா!...அவர் விளையாடிட்டாலும்...கடுப்பில் ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணி,2 டி20 போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.இந்த போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் இடம்பெற்றிருந்தார்.மோசமாக ஆடி வரும் ராகுலிற்கு ஏன் அணியில் இடம் வழங்கப்பட்டது என ரசிகர்கள் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.இந்நிலையில் கே.எல்.ராகுலிற்கு ஏன் அணியில் இடம் வழங்கப்பட்டது என்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் ''நடக்கவிருக்கும் 2 டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டதற்கான மிக முக்கியமான காரணம்,கடந்த 15ம் தேதி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததே.அந்த போட்டியில் அவரின் செயல்பாடு மிகவும் சிறப்புடன் அமைந்தது.அதன் அடிப்படையிலே நடக்கவிருக்கும் 2 டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

தன்னை நிரூபித்து கொள்ள அவருக்கு இந்த போட்டிகள் சிறப்பான ஒரு வாய்ப்பாக அமையும்.உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.அதில் 3வதாக களமிறங்கும் வீரரின் தேவை மிக முக்கியமானது.எனவே வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் தன்னுடைய திறனை அவர் எவ்வாறு வெளிக்காட்டுகிறார் என்பது ஆராயப்படும் என  எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.மூன்றாவது வீரராக ஏன் தினேஷ் கார்திக்கை களமிறக்க கூடாது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.முன்னதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்,மூன்றாவது வீரராக களமிறக்கப்பட தினேஷ் கார்த்திக் சரியான தேர்வு என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CRICKET, BCCI, DINESHKARTHIK, KLRAHUL, TWITTER, INDIA VS AUSTRALIA, ODI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS