ஆளுநருக்கும் முதல்வருக்குமான போர்: புதுச்சேரியில் பரபரப்பு..இறங்குகிறதா மத்தியப்படை?

Home > News Shots > தமிழ் news
By |

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் அணியும் விதிமுறைக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கிரண் பேடி எடுத்துள்ள அதிரடி முயற்சி பெரும் பரபரப்பாகவும் வைரலாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் போடாமல், அசால்ட்டாக வரும் இளைஞர்கள் சிலர் சொல்லும் அலட்சியமான பதில், ஹெல்மெட் வாங்குவதற்கு பணம் இல்லை என்பதாக இருக்கிறது. இதனை கவனித்த கிரண் பேடி, அவ்வாறு பொறுப்பின்றி பதில் சொல்லும் இளைஞர்களப் பார்த்து‘ஹெல்மெட் வாங்க பணம் இல்லை, ஆனா பைக் மட்டும் எப்படி வாங்கியிருக்கீங்க’ என பொதுமக்களின் மத்தியில் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

2017-ஆம் ஆண்டு புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி கட்டாயம் ஹெல்மெட் அணியும் விதிமுறையை நடைமுறைப்படுத்த முற்பட்டார். ஆனால் அப்போது பொதுமக்களிடையே இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளப் படாததால், அப்போது அந்த சட்ட விதிமுறைகள் கைவிடப்பட்டன.

இந்த நிலையில் போன வாரம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர், கிரண் பேடி, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி அந்த சட்டத்தை கட்டாயப்படுத்தினார். ஆனால் முன்பு நிகழ்ந்தவாறு தற்போதும் பொதுமக்களிடையே இந்த விதிமுறைச் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக, ‘எப்படி எங்களுக்கு பொங்கல் பணம் தர அரசிடம் பணம் இல்லையோ..அதுபோல எங்களுக்கு ஹெல்மெட் வாங்கவும் பணம் இல்லை’ என்று இளைஞர்கள் பலர் கோஷம் போட்டனர். இந்த கோஷத்திற்கு பதில் பேசிய கிரண் பேடி, ‘உங்களிடம் பைக் வாங்க பணம் இருக்கு… ஆனால் ஹெல்மெட் வாங்க பணம் இல்லையா…?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்போது புதுச்சேரியில் அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது.

இதனிடையே புதுவை ஆளுநரான கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மக்களின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் புதுச்சேரி சபாநாயகர் சபாநாயகர் வைத்திலிங்கமும் பங்கேற்றுள்ளார். மேலும்
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆளுநரை கண்டித்து உருவபொம்மைகள் எரிக்கப்படுவதாலும், முதல்வரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும் மத்தியப்படையை அனுப்ப கிரண்பேடி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

PONDY, PUDUCHERRY, HELMET, KIRANBEDI

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES