அண்மையில் கேரளாவில் வெள்ளம் வந்து அனைவரையும் திண்டாடச் செய்தது. இதனால் கேரளாவின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை என எல்லாவறையும் அண்டை மாநிலத்தவர்களும் மொழியின சாதிமத பேதமின்றி கொடுத்து உதவினர். முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் முகங்கள் வாடின.

 

சாலைகளை பொறுத்தவரை, வெள்ளம் வடிந்த பாடில்லை. நிலச்சரிவுக்குள் வாகனக்கள் சிக்கி, உயிர்ச் சரிவை உண்டாக்கின. இறுதியில் ஒரு வழியாய் மழைநாள் ஓய்ந்தது. மீண்டும் கேரளாவின் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. 6 நாட்களுக்குப் பிறகு திரிசூர் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டதும், வாகனங்கள் அலைமோதுவதில் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு நிகராக கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் கேரள மக்கள் செய்த காரியம் அனைவரையும் புல்லரிக்க வைத்தது. ஒருவர் பின் ஒருவராக பைக்கில் அணிவகுத்து நின்றிருந்த காட்சிகள் காண்போரை வியக்க வைத்தன.  இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் கேரள மக்கள் என்ற பெயர் இருந்தாலும், ஆட்டுமந்தை போல் முந்திக்கொள்ள நினைக்காமல், மனிதத்துவ அடிப்படையில் ஒவ்வொரு மனிதரையும் பிறர் மதித்து வழிவிட்டு பொறுமையாக காத்திருக்கும் இந்த கேரள மக்கள் அனைத்து மக்களுக்கும் முன்னுதாரணமாகவே திகழ்வதாக சோஷியல் மீடியாக்களில் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

BY SIVA SANKAR | AUG 30, 2018 11:47 AM #KERALA #KERALAFLOOD #KERALAPEOPLES #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS