பெண்கள், குழந்தைகள் இரவில் தங்கிக்கொள்ள ‘எண்டெ கூடு’: அசத்தும் கேரளா!

Home > தமிழ் news
By |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீண்டும் புத்துணர்ச்சி பெற்று பேரெழுச்சியைக் கண்டது. ஜப்பானின் நகரங்கள் போரினால் அழிந்து மீளுருவாக்கம் அடைந்தபோது இருந்த அதே சூழல்தான் ஏறத்தாழ கேரளா வெள்ள பாதிப்பின் சுவட்டில் இருந்து தன்னை புத்தம் புதிதாய் வடிவமைத்துக்கொள்ளும்போதும் இருந்துள்ளது.


ஆனால் இயற்கை எழில் கொஞ்சம் கேரளாவை அப்படியெல்லாம் இயற்கை கைவிட்டுவிடுமா என்ன? என்பதற்கேற்ப, மீண்டு வந்துள்ள கேரள அரசு மக்களுக்கான பல வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள புதிய வசதிதான் ‘எண்டெ கூடு’ திட்டம்.  கேரளாவின் முக்கிய முனையமான திருவனந்தபுரத்தின் வழியேதான் வேற்று மாநிலத்தவர்கள் கேரளாவுக்குள் உள்வருகின்றனர். ஆனால் மாலை நேரத்தைத் தாண்டி வருபவர்கள், குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் தங்கும் விடுதிகள் இலவச உணவு, கழிவறை, குளிரூட்டப்பட்ட ஏ.சி ரூம்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர்தான் எண்டெ கூடு. 

 

முன்னதாக சமூக நீதி மற்றும் பஞ்சாயத்து தலைவராக இருந்த எம்.கே.முனீர், மலப்புரத்தில் தெருச்சாலையில் உறங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற சிறுமிக்கு நேர்ந்த மனிதவிரோத செயலுக்கு பிறகு இப்படி ஓர் ஆதரவற்றோர், பாதுகாப்பு தேவைப்படுவோர், பெண்களுக்கான இரவுநேர தங்கும் விடுதிகளை கோழிக்கூட்டில் தொடங்கிவைத்தார்.


மாலை தொடங்கி அடுத்த நாள் காலை வரை தங்கிக்கொள்ளும் இந்த வசதிகள் வாய்ந்த தங்கும் விடுதிகள் தற்போது சுகாதாரம் மற்றும் சமூகநீதி அமைச்சர் ஷைலஜாவினால் முன்னெடுக்கப்பட்டு, அதன் விளைவாக திருவனந்தபுரத்திலும், தம்பனூர் இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. எனினும் அடுத்தடுத்து பிற இடங்களிலும் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. #அட்டிபொலி!

KERALA, ENTEKOODU, WOMENSAFETY, SHELTER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS