கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித்தீர்த்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் ஓயாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது.இடுக்கி, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட 14 மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மழை 324 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. கொட்டுத் தீர்க்கும் மழையில் கண்ணீருடன் கேரள மக்கள் தவித்து வருகின்றனர். 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சூர் பகுதியில், வெள்ளம் சூழந்த பகுதியிலுள்ள வீட்டில் பெண்மணி ஒருவர் சிக்கியிருந்தார். அவரை மீட்புக் குழு மீட்க முயற்சித்தாலும், தன்னுடன் இருக்கும் 25 நாய்களையும் மீட்டால் தான், தானும் வருவேன் என அவர் உறுதியாக இருந்ததால், கடைசியில் நாய்களுடன் அவரும் மீட்கப்பட்டார்.

 

வீட்டை சூழ்ந்த தண்ணீரின் அளவு உயர்ந்து வந்த நிலையில், சுனிதா என்ற பெண் தன் வீட்டிலிருக்கும் நாய்களையும் மீட்டால் தான் தானும் வெளியே வருவேன் என்று மீட்புக் குழுவிடம் தெரிவித்தார். இது தேசியப் பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்தவர்களை நெகிழச் செய்தது. அதன்பிறகு  அந்தப் பெண்மணியையும், நாய்களையும் மீட்டனர்.

 

மீட்புப் படை சுனிதாவின் வீட்டை நெருங்கிய போது, வீடு முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி இருந்தது. நாய்கள் படுக்கையின் மேல் நின்றிருந்தன. மீட்கப்பட்ட சுனிதா, அவரது கணவர், மீட்கப்பட்ட நாய்கள் என அனைவரும்  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு என தனியான முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

BY JENO | AUG 18, 2018 10:03 PM #KERALAFLOOD #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS