கடந்த ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு கேரளா பெருத்த கனமழையை சந்தித்து இன்றுவரை மீளாத்துயரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட மாநிலங்களும் இந்திய தேசிய ராணுவ மீட்பு படைகளும் கேரள மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெருகிய மழையால் கேரளாவில் கண்ணூர், கொல்லம், காசர்கோடு, ஆலப்புழா, திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி திருவனந்தபுரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு தண்ணீருக்குள் மிதக்கின்றன. ஒட்டுமொத்தமாக 775 கிராமங்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 172 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை அம்மாநில அரசு வெளிமாநிலங்களில் உதவியோடும் தனித்தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் பேரிடர் காரணமாக மாணவர் ஒருவரின் பள்ளி சான்றிதழ்கள் அனைத்தும் வெள்ள நீரில் அழிந்துள்ளன. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோழிக்கோட்டை சேர்ந்த கைலாஷ் என்கிற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைநிலை ஊழியராக இருக்கும் கைலாஷ் என் தந்தை தன் மகனின் படிப்பை மட்டுமே நம்பி அவர் ஐடிஐ படிக்க வைக்க எண்ணியிருந்தார். இதற்கான அட்மிஷன் எல்லாம் கிடைத்து விட்டது.
இதற்கிடையே ஒரு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்ட கைலாஷ் மீண்டும் தன் வீட்டிற்கு சென்று சான்றிதழை பார்க்கையில் அவை அழிந்து போகியுள்ளதை பார்த்தவுடன் மனம் உடைந்து அங்கேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். சில மணி நேரங்கள் கழித்து அவருடைய பெற்றோர்கள் வந்து பார்க்கும் பொழுது மாணவர் கைலாஷ் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்ததும் பதறிப் போய் அழ தொடங்கியுள்ளனர். சான்றிதழ் தொலைந்ததால் +2 முடித்திருந்த தன்னால் கல்லூரிகளில் சேர முடியாது என்கிற மனப்பான்மையில் கைலாஷ் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- முதுகை படியாக்கிய மீனவர்..வெள்ளத்தை விரட்டிய மனிதநேயம் !
- Kerala Govt to honour fishermen part of rescue mission
- முழுவதும் மூழ்கிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை..விமான படை வீரரின் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சிகள் !
- கேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்!
- Kerala Floods: Indian Army warns of fake video circulating on social media
- Video: Toddler rescued via helicopter in Kerala
- Relief for Kerala: Red alert withdrawn
- கடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்!
- ஆஃப்லைனிலும் லொகேஷனை பகிரலாம்.. கேரளாவுக்கு உதவ முன்வந்த கூகுள்!
- வைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!