கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்ணை பாதுகாப்பாக மீட்ட கடற்படை  வீரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஆங்கிலத்தில்  பெயிண்ட்டால் தேங்ஸ் (நன்றி) என்று எழுதி கேரள மக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில், மீட்புப் பணிக்காக முப்படையினரும், பேரிடர் மீட்புப் பணியிரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் கடற்படையை சேர்ந்த கமாண்டர் விஜய் சர்மா மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நிறைமாத கர்ப்பிணியான சஜிதா பபில் உதவிக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

 

இதை கவனித்த .கமாண்டர் ஹெலிகாப்ட்டரை அந்த வீட்டின் மொட்டைமாடியில் இறக்கி அந்த பெண்ணையும் அவருடன் இருந்த மற்றோரு பெண்ணையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில்,  பெயிண்ட்டால் ஆங்கிலத்தில் தேங்ஸ் (நன்றி) என்று எழுதி தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

 

மொட்டை மாடியில்  எழுதப்பட்டுள்ள இந்த `தேங்க்ஸ்' புகைப்படம் காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

BY JENO | AUG 20, 2018 3:40 PM #KERALAFLOOD #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS