கேரளா,மழை, மற்றும் வெள்ளம், என திரும்பிய திசைகளிலெல்லாம் நீர் மட்டுமே காட்சியளிக்கிறது. வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிற்கதியாகி நிற்கின்றனர்.

 

அண்டை மாநிலத்தவர்கள். தேசிய கட்சிகள் உள்ளிட்டவை தங்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வின் ஒருமாத சம்பளம் தரப்படும் என அறிவித்துள்ளனர். திரைத்துறையினர் அவர்கள் பங்குக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். மாநிலங்கள் தங்களால் இயன்ற அளவில் நிவாரண நிதிகளை அறிவித்துள்ளன.

 

கேரளாவில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வலியுறுத்தி பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில், ஓமனில் வசித்து வரும் ஒருவர் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவக் கூடாது எனச் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். 

 

ஓமன் நாட்டில் உள்ள லூலூ நிறுவனத்தில் கேஷியராக வேலைப் பார்த்து வந்தார். இவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவக்கூடாது என்றும் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு குறித்தும் சில மோசமான  பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு பலரும் கண்டனங்கள் எழுப்பினர்.

 

உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுல் தான் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கேட்டு ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டார். அதில், ``நான் செய்தது மிகப்பெரிய  தவறு. இதற்காக என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரியாதவர்கள் முதல்கொண்டு  அனைவரும் என்னைத் திட்டிவருகின்றனர். நான் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டபோது குடித்திருந்தேன். அதனால்தான் இவ்வாறு செய்துவிட்டேன். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில்  அவரின் பதிவைப் பார்த்த லூலூ நிறுவனம் உடனடியாக அவரை வேலையை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

BY JENO | AUG 20, 2018 1:48 PM #KERALAFLOOD #FACEBOOK STATUS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS