'ஓவர் ஸ்பீட்'.. சைக்கிளில் சென்றவரிடம் ரூ.2000 அபராதம் வசூலித்த போலீஸ்!

Home > தமிழ் news
By |

அதி வேகமாக வந்ததாக கூறி, சைக்கிளில் சென்றவரிடம் போலீசார் 2000 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

உத்தர பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்னும் இளைஞர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் கும்பாலா என்ற பகுதியில் அவர் சைக்கிளில் சென்றபோது அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சைக்கிளில் அதிவேகமாக வருகிறாய், ஹெல்மெட் இல்லை அபராதம் கட்டுங்கள் என கூறியுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த காசிம் அபராதம் கட்டுகிறேன் என ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் சொன்ன அபாரதத் தொகையை கேட்ட காசிம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காரணம் 2000 ரூபாய் அபராதம் காட்டுமாறு தெரிவித்துள்ளனர்.மேலும் பணத்தை வாங்கிக்கொண்டு இருசக்கர எண்ணின் பதிவெண்ணை எழுதி,500 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ளனர்.

 

தனது ஒருநாள் வருமானமே 400 ரூபாய் தான் என்பதாலும், 5 நாள் வருமானத்தை மொத்தமாக இழந்ததாலும் கொதிப்படைந்த காசிம் இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட, தற்போது சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

KERALA, POLICE, BICYCLE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS