கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக  மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

 

கேரளாவின் பல பகுதிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பல பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

 

கேரளாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான கொச்சின் விமான நிலையம் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

 

பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல பகுதிகள் இருளில் தத்தளித்து வருகிறது.மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 

இந்நிலையில் கேரள மின் துறையை சேர்ந்த ஊழியர்கள் கொட்டும் மழை மற்றும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் மின்இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றர்கள்.

 

கொட்டும் மழையில் மின்கம்பகளில் அமர்ந்து தங்களது பணியை செய்துவரும் அவர்களது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS