தொடர் கனமழையினால் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா வெள்ளத்தில் தொடர்ந்து தத்தளித்து வருகிறது. ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுவரை கனமழைக்கு 167 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் 94 வருடங்களுக்குப்பின் மிகப்பெரிய பேரிடரை கேரளா சந்தித்துள்ளது. தற்போது பேரிடரில் சிக்கியிருக்கும் கேரளாவுக்கு,பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

 

இந்தநிலையில் வெள்ள நிவாரணத்திற்காக அடுத்த 100 நாட்களுக்கு மதுபானங்களுக்கான கலால் வரியை 0.5%-ல் இருந்து 3.5% உயரத்தி உள்ளதாக, கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் 230 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இந்த பணம் அனைத்தும் வெள்ள நிவாரண பணிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS