‘என்னா சவுண்டு’ .. கட்சிக்காரர்களை அலறவிட்ட, தமிழக போலீஸை கவுரவிக்கும் கேரளா!

Home > தமிழ் news
By |

சபரிமலை சன்னிதானத்துக்குள் 2 பெண்கள் நுழைந்ததால் கேரளா மற்றும் கேரள எல்லையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதில்  கன்னியாகுமரியில் பாஜகவினரை மிகவும் துணிச்சலான முறையில் எச்சரித்து அனைவரையும் மெர்சலாக்கிய களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன ஐயர் இந்தியா முழுவதும் பிரபலமானார்.


ஆர்ப்பாட்டக்காரர்கள், கன்னியாகுமரிக்கும் கேரள எல்லைக்கும் உட்பட்ட பகுதியான களியக்காவிளையில் கேரள அரசு பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்றபோது, கோபம் கொண்ட களியக்கவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன ஐயர் மிகவும் ஆக்ரோஷமாக, ‘சவுண்டு விட்டு நீங்க எல்லாம் ஆளா.. என்ன தாண்டி தொடுங்க பாக்கலாம்.. மரியாதையா ..போயிடுங்க.. நா பல டிரான்ஸ்ஃபர் ஆர்டர பாத்துட்டேன்’ என்கிற தொனியில் எச்சரித்தார்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, அவரை பாராட்டி கேரள அரசின் உயரிய விருதான தச்சங்கிரி விருதும், ஆயிரம் ரூபாய் பரிசும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசுப்பேருந்து இவரைப் போன்ற காவலர்களை நம்பிதான் அப்பகுதியில் நுழைகிறது என்பதால் இத்தகைய விருது வழங்கி அவரை கேரள அரசு கவுரவப்படுத்தியுள்ளது.

#SABARIMALAPROTESTS, KERALAGOVERNMENT, TNPOLICE, MOHANAIYER

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS