கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய கனமழையால், கடவுளின் தேசம் கண்ணீரில் தத்தளிக்கிறது. நிலச்சரிவு,மழை-வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

 

தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிக்கரங்கள் நீளுகின்றன. 24 மணி நேரமும் மீட்புப்பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி 500 கோடி ரூபாயை இடைக்கால நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில் அமேசான் நிறுவனமும்  இந்த நிவாரணப் பணிகளில் இணைந்துள்ளது.அமேசான் இந்தியா சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவ பிரத்யேக வலைப்பக்கம் துவங்கப்பட்டுள்ளது.  கேரள வெள்ள பாதிப்புக்கு உதவக்கோரும் பேனர் அமேசான் முகப்பு பக்கத்தில்  இடம்பெற்றிருக்கிறது.

 

அதனை கிளிக் செய்தால் அங்கு மூன்று தொண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. பொருட்களை கார்ட்டில் சேர்த்து, முகவரி பகுதியில் தொண்டு நிறுவன முகவரியை பதிவிட்டு பணம் செலுத்த வேண்டும்.

 

பணம் செலுத்தியதும் அமேசான் சார்பில் பொருட்கள் கேரளாவில் விநியோகம் செய்யப்படும், அங்கிருந்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஒப்படைக்கப்படும்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS