கேரளாவில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை மற்றும் வெள்ளம் அம்மாநில  மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.  கேரள வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பேரிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் வெளியே செல்லமுடியாமல் மிகவும் அவதிப்பட்டார். அவரது கர்ப்பப்பை பனிக்குடம் உடைந்த நிலையில்  அவர் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த கப்பற்படை  வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

 


அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக இந்திய கப்பற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

இந்த கடுமையான சூழலில் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மீட்பு குழுவினருக்கு அந்த பெண்ணின் குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்தார்கள்.

BY JENO | AUG 17, 2018 4:57 PM #KERALAFLOOD #INDIAN NAVY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS