கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக  மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

 

நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

 

கேரளாவின் பல பகுதிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பல பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

 


இந்திய முப்படையை சேர்த்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் கேரள மாநிலம் ஆலுவா பகுதில் தனியாக தத்தளித்து கொண்டிருந்த சிறுவனை இந்திய கப்பற்படையை சேர்த்த வீரர் மீட்கும் காட்சி மெய்சிலிர்க்கும் விதமாக அமைந்துள்ளது.அதன் வீடியோ காட்சி  தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

BY JENO | AUG 17, 2018 11:08 AM #KERALAFLOOD #TNFLOOD #INDIAN NAVY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS