கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 324 உயிர்கள் பலியாகின. 2000கோடிக்கு மேல் கடும் இழப்பை சந்தித்துள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.பல மாநில அரசுகளும் ஏராளமான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

 

முப்படையை சேர்ந்த வீரர்கள் பல்வேறு கட்டமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார்கள்.பல்வேறு தரப்பு மக்களும் கேரளாவை  மீட்டெடுக்கும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இந்நிலையில்  அனைத்திந்திய இந்து மஹாசபாவின் தலைவரான சாமியார் சக்கரபாணி மகாராஜ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "கேரள மக்களுக்கு உதவுமாறு நான் வேண்டுகிறேன். ஆனால், உதவியானது இயற்கையை மதிப்பவர்களுக்கும் ஜீவராசிகளைப் பேணுபவர்களுக்குமே அளிக்க வேண்டும்.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரொட்டி கிடைத்தபோது கேரளவாசிகள் சிலர் கோமாதாவை வதைத்து அந்த இறைச்சியை உண்டனர். அதனால், மாட்டிறைச்சியை உண்ணாதவர்களுக்கு மட்டுமே இந்துக்கள் உதவ வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அவரது இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநிலம் அதிதீவிர இயற்கைப் பேரிடரை சந்தித்திருக்கும் நிலையில் பிரிவினையைத் தூண்டும் வகையில் அவர் பேசியிருப்பதாகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

BY JENO | AUG 23, 2018 3:41 PM #KERALAFLOOD #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS