வரலாறு காணாத மழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 167 பேர் இந்த மழை-வெள்ளத்துக்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் கூகுள் நிறுவனம் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய 'பெர்சன் பைண்டர் டூலை' ஆக்டிவேட் செய்துள்ளது. இதனை லேப்டாப்,மொபைல் போன்களில் பயன்படுத்தலாம்.

 

பயன்படுத்தும் வழிமுறைகள்:

கூகுளில் சென்று person finder என்று தேடினால் kerala floods என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால், நீலம் மற்றும் பச்சை என 2 நிறங்களில் இரண்டு லிங்குகள் கிடைக்கும். வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை கண்டுபிடிக்க 'i am looking for someone' என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். சிக்கியவர்கள் குறித்து தகவல்கள் பகிர 'I have information about someone' என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.

விவரங்கள்

i am looking for someone என்ற லிங்கை கிளிக் செய்து நீங்கள் தேடும் நபர் குறித்த விவரங்களை அதில் பதிவு செய்து,அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.நீங்கள் கொடுக்கும் தகவல்களுக்கு ஏற்ப அதனை ஒத்துள்ள நபர்களின் தகவல்களை கூகுள் அளிக்கும்.

பேஸ்புக்:

இதேபோல பேஸ்புக் நிறுவனமும் சேப்டி செக்கினை கேரளாவுக்கு ஆக்டிவேட் செய்துள்ளது. பேஸ்புக்கில் சென்று kerala floods என்று டைப் செய்தால் நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில்  இருக்கிறீர்களா? என்று கேட்கும். அதனை கிளிக் செய்து நான் பத்திரமாக இருக்கிறேன் என்பதை கிளிக் செய்தால், அது உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு அந்தத் தகவலினை கொண்டு சேர்க்கும்.

 

இதேபோல i am not safe என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பத்திரமாக இல்லை என்பதை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும்.இதன் மூலம் நீங்கள் உதவிகளை கோரலாம்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS