கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதித்த இடங்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் சனிக்கிழமை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 

தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் கொட்டித்தீர்த்து வருகிறது.இதனால் கடுமையான அழிவை சந்தித்துள்ளது கேரளா.மழை  மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மீட்புப்பணிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.மொத்தம் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளது.அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது ஆறுகளில் கரைபுரண்டு ஓடுகிறது.

 

மேலும் சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையின் முதலாவது மதகு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மேலும் 5 மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

BY JENO | AUG 11, 2018 1:53 PM #KERALA #KERALAFLOOD #KERALA FLOOD #KERALA CM #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS